பானிபட் ஆயில் ரிஃபைனரியில் துப்பாக்கிச் சூடு பொங்கி எழுந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்! வேலைநிறுத்தம் 3
7 May 2026, 10:17 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி

வட இந்தியாவின் தொழிற்துறை மையங்களில் நிலவும் நவீன அடிமைத்தனத்திற்கு எதிராக, உழைக்கும் வர்க்கம் தனது போர்க்குணமிக்க எழுச்சியைத் தொடங்கியுள்ளது. ஹரியானாவின் பானிபட் முதல் பீகாரின் பெகுசராய் வரை, பொதுத்துறை நிறுவனங்களின் நிழலில் மறைந்துள்ள ஒப்பந்தத் தொழிலாளர் சுரண்டலைத் தவிடு பொடியாக்கும் வகையில் இப்போராட்டங்கள் புதிய வரலாற்றைப் படைத்து வருகின்றன.

பானிபட் ஆயில் ரிஃபைனரியில் துப்பாக்கிச் சூடு பொங்கி எழுந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

வேலைநிறுத்தம் 3

பானிபட், மே 7- ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) சுத்தி கரிப்பு ஆலையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள், கடந்த பிப்ரவரி 23 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர் நலச் சட்டங்களை அப்பட்டமாக மீறி, கொத்தடிமைகளைப் போலத் தொழிலாளர்களை நடத்தும் ஒப்பந்ததாரர்களின் போக்கைக் கண்டித்து இந்தப் போராட்டம் வெடித்தது.

நவீன அடிமைத்தனமும் சுரண்டலும் ஆலையின் குடியிருப்புப் பகுதி அருகே உள்ள 4-ஆவது நுழைவாயிலில் திரண்ட தொழிலாளர்கள், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பட்டியலிட்டுள்ளனர்.

ஒரு மாதச் சம்பளத்தைத் தடுத்து வைத்துக்கொண்டு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஊதியம் வழங்குவது, பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ போன்ற சமூகப் பாதுகாப்புப் பலன்களை மறுப்பது எனப் பல முறைகேடுகள் அங்கு அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக, தொழிலாளர்களின் பங்களிப்புத் தொகையை மட்டு மல்லாது, ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டிய தொகையையும் தொழி லாளர்களின் சொற்ப ஊதியத்தி லிருந்து பிடிப்பது சட்டவிரோத மானது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமும் 12 மணி நேர வேலை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குரிய கூடுதல் நேர ஊதியம் (Overtime) வழங்கப்படுவதில்லை. குடிநீர் வசதி, கழிவறைகள், சிற்றுண்டிச் சாலை என அடிப்படை வசதிகள் ஏதுமின்றித் திறந்தவெளியில் மதிய உணவு உண்ணும் அவலநிலையில் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடும் தடியடியும் - நிர்வாகத்தின் அடக்குமுறை தொழிலாளர்களின் நியாய மான கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, நிர்வா கம் மத்திய தொழில் பாது காப்புப் படையை (CISF) ஏவி அடக்குமுறையைக் கையாண்டது.

பிப்ரவரி 23 அன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

இந்தத் திடீர் தாக்குதலால் நிலைமை மோசமடைந்தது.

தற்காப்பிற்காகத் தொழிலாளர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர்கள் போராட்டக் களத்திலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இருப்பினும், அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத தொழிலாளர்கள் 4-ஆவது கேட் முன்பாகத் தங்கள் அமர்வுப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் - வலுப்பெறும் ஆதரவு இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 24 அன்று சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி மற்றும் பிஎம்எஸ் ஆகிய மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரதிநிதிகள் குழு போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

சிஐடியு மாநிலச் செயலாளர் சுனில் தத், பானிபட் தொழிலாளர் சங்கப் பொருளாளர் நவீன் சாப்ரா, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பவன் சைனி, ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் மகாவீர் சர்மா, பிஎம்எஸ் மாநிலத் தலைவர் அசோக் கௌதம் ஆகியோர் அடங்கிய இந்தக் குழுவினர், ஆலையின் தலைமை மேலாளரிடம் விரிவான மனுவை அளித்தனர்.

கோரிக்கைகள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகத்திற்கு வைக்கப் பட்ட முக்கியக் கோரிக்கைகள்:

• வேலை நேரக் கட்டுப்பாடு: 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் 4 மணி நேரத்திற்குத் தகுந்த இரட்டிப்பு ஊதியம் (Double Over time) வழங்கப்பட வேண்டும்.

• சரியான ஊதிய விநியோகம்: ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

• சமூகப் பாதுகாப்பு: அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

இதில் ஒப்பந்ததாரரின் பங்களிப்புத் தொகையைத் தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து கழிக்கக் கூடாது. • அடிப்படை வசதிகள்: பாதுகாப்புக் கருவிகள், தூய்மையான குடிநீர், கழிவறை மற்றும் சலுகை விலை உணவகம் போன்ற வசதி களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இந்தச் சுரண்டல்களுக்குக் காரணமான ஒப்பந்ததாரர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிலாளர் களின் கோரிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமான உறுதியை நிர்வாகம் அளிக்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பானிபட் தொழிலாளர்களின் இந்தப் போராட்டம், ஒன்றிய அரசின் தொழிலாளர் தொகுப்புச் சட்டங் களுக்கு எதிரான ஒரு மாபெரும் எச்சரிக்கையாகும்.

வடஇந்தியா வின் முக்கியத் தொழிற்சாலை களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து நடத்துகின்ற இந்தப் போராட்டங் கள், தொழிலாளர் வர்க்கத்தின் புதியதொரு எழுச்சியைப் பறைசாற்றுகின்றன. (லெப்ட் வியூஸ்)