சேத்தூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழா
21 Mar 2026, 2:42 pm
<p><strong>சேத்தூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழா</strong></p>
<p> இராஜபாளையம், மார்ச் 21- இராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனிப் பூக்குழி திருவிழா சனியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான 29 ஆம் தேதி சப்பரத்தில் அம்மன் வீதி உலா வரும்பொழுது பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் கணேசன், செயலாளர் காந்தி நாயக்கர், பொரு ளாளர் முத்துக்குமார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.</p>
