என்டிசி மில்களை உடனடியாக இயக்க வேண்டும் பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்
24 Dec 2025, 4:16 pm
<p><strong>என்டிசி மில்களை உடனடியாக இயக்க வேண்டும் பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்</strong></p>
<p>கோவை, டிச.24- தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான என்டிசி ஆலைகளை உடனடியாக ஒன்றிய அரசு இயக்க வேண்டும் என பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) குழு கூட்டம் கோவை, காட்டூரில் உள்ள கோயம்புத்தூர் மில் சங்கத்தில் புதனன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில நிர்வாகி எம்.ஆனந்தகுமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் எம்.அசோகன் நிகழ்ச்சி நிரலை முன்மொழிந்தார். நிதி நிலைமை குறித்தும் பொருளாளர் எஸ். சக்திவேல் முன்வைத்தார். இதில், சிறந்த முறையில் நவீன இயந்திரங்களை தன்னகத்தே கொண்ட என்டிசி மில்களை ஒன்றிய அரசு உடனடியாக இயக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கூட்டுறவு மில்களில் தொழிலாளர்களை சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்ய குழுவை செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், சம்மேளனத்தின் உதவித் தலைவர் சி.பத்மநாபன். மாநில நிர்வாகிகள் ஆர். தனபால், ஈஸ்வரமூர்த்தி, வி. மாணிக்கவாசகம் உள்ளிட்ட சம்மேளனக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக, சிஐடியு மாவட்டத்தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.</p>
<p> </p>
