முந்தய பக்கம்

இடது முன்னனி சார்பில் பஞ்சாயத்து ராஜ் இயக்கம்

6 Dec 2025, 2:48 pm
இடது முன்னனி சார்பில் பஞ்சாயத்து ராஜ் இயக்கம்
<p><strong>இடது முன்னனி சார்பில் பஞ்சாயத்து ராஜ் இயக்கம்</strong></p> <p>பாலக்காடு, டிச.6- கேரளம் மாநில உள்ளாட்சித் தேர் தலையொட்டி, மாநிலம் முழுவதும் சனியன்று இடதுசாரி கட்சிகளின் சார் பில் பஞ்சாயத்து ராஜ் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரளம் மாநிலம் முழுவதும் உள் ளாட்சித் தேர்தலையொட்டி இடது சாரி கட்சிகளின் சார்பில் பஞ்சாயத்து ராஜ் பிரச்சார இயக்கம் நடைபெறு வது வழக்கம். இந்த பஞ்சாயத்து ராஜ் இயக்கத்தில், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்திற்குட்பட்ட உள்ளாட்சி யில் போட்டியிடும் இடதுசாரி கட்சிக ளின் ஒட்டுமொத்த வேட்பாளர்களும் ஒன்றினைந்து, மக்களிடம் ஆதரவு &nbsp;கேட்டு ஊர்வலமாக வந்து சங்க மித்து, பொதுக்கூட்டம் நடை பெறும். இதன்ஒருபகுதியாக பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி பஞ்சாயத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து ராஜ் நிகழ் விற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச் சேரி இடைக்குழு செயலாளர் சுபாஷ் தலைமை ஏற்றார். இந்த பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் துவக்கிவைத்தார். இதில், சிபிஎம் மழம்புழா சட்டப் பேரவை உறுப்பினர் பிரபாகரன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சுமலதா மோகன்தாஸ் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram