முந்தய பக்கம்

ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

18 Dec 2025, 5:31 pm
ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
<p><strong>ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்</strong></p> <p>ஓய்வூதியர்கள் மீதான துறை ரீதியான விசாரணைகளை அரசு நிர்ணயித்துள்ள காலவரையறைக்குள் முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் எஸ். இனியன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பச்சையப்பன், மாவட்டத் தலைவர் பரிதிமால் கலைஞன் மற்றும் நிர்வாகிகள் கோ. அண்ணாமலை, சி. பால்ராஜ், அ. கருணாகரன், ப. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓய்வூதிய சங்க மாநிலச் செயலாளர் சி. சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.</p> <p>கடலூரில் மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை மாநிலத் துணைத் தலைவர் ஆர். நடராஜன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் கோ. ஆதவன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். மனோகரன், செயலாளர் என். காசிநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பாலகிருஷ்ணன், கூட்டமைப்பின் தலைவர் டி. புருஷோத்தமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டப் பொருளாளர் பி. பத்மநாபா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram