தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பஞ்சமி நிலங்கள் மீட்பு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர்

22 Sept 2026, 10:06 pm
பஞ்சமி நிலங்கள் மீட்பு அறிவிப்பு  விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர்

பஞ்சமி நிலங்கள் மீட்பு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர்

சென்னை, செப்.22 -சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா விடுதியில் உணவு முறையாக வழங்கப்படவில்லை எனமாணவர்கள் புகார் தெரிவித்த நிலையில், சமூக நீதி துறை அமைச்சர் வன்னி அரசு அங்கு திடீர் ஆய்வுமேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பஞ்சமி நிலங்களுக்கான ஆணையம் அமைக்கும் பணிகள் முதலமைச்சரின் ஒப்புதலின் பேரில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நிலங்களை மீட்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருப்பதாகவும், இவை முறைகேடாகக் கையகப் படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அமைக்கப்படும் ஆணையம் வெறும் அறிவிப்பாக மட்டும் இராது, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

தற்போது மாணவர்களுக்கு மட்டன், சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மாட்டிறைச்சி உணவையும் சேர்க்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், கிச்சடி, உப்புமா, சேமியா ஆகியவை நீக்கப்பட்டு இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவை சேர்க்கப்பட்டுஉள்ளதாகவும் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.