தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பஞ்சமி, ஆதிதிராவிடர் நிலங்களை ‘அரசு தரிசு’ என வகைமாற்றம் செய்யக் கூடாது

21 May 2026, 10:34 pm
பஞ்சமி, ஆதிதிராவிடர் நிலங்களை ‘அரசு தரிசு’ என வகைமாற்றம் செய்யக் கூடாது

பஞ்சமி, ஆதிதிராவிடர் நிலங்களை ‘அரசு தரிசு’ என வகைமாற்றம் செய்யக் கூடாது

சென்னை, மே 21- தமிழ்நாடு முழுவதும் ஆக்கி ரமிப்பிலிருந்து மீட்கப்படும் பஞ்சமி மற்றும் ஆதிதிராவிடர் நிபந்தனை நிலங்களை (AD Condition Lands), வரு வாய்த்துறை ஆவணங்களில் ‘அரசு தரிசு’ என வகைமாற்றம் செய்வதைத் தடுத்து, மீண்டும் பட்டியலின மக்களுக்கே வழங்கிட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இயக்கத் தின் சார்பில் அதன் இணைப்பா ளர் ச.கருப்பையா, முதலமைச் சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “கடந்த 1892-ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு ஆணை 1010 மற்றும் 1010ஏ மூலம் எளிய பட்டியலின மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காகச் சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் நிபந்தனைகளின் அடிப்படை யில் வழங்கப்பட்டன.

ஆனால், தற்சமயம் இத்தகைய நிலங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டங் கள் மற்றும் நீதிமன்ற வழி காட்டுதல்களின்படி, தற்போது வருவாய்த்துறையினர் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை மீட்டு வருகின்றனர்.

எனினும், அவ்வாறு மீட்கப்படும் நிலங்களை வரு வாய்த்துறை ஆவணங்களில் திட்டமிட்டே ‘அரசு தரிசு’ என வகைமாற்றம் செய்து பதிவு செய்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் இத்தகைய நிலங்களை ‘ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப் பட்ட நிலம்’ என்றே திருத்தம் செய்ய வேண்டுமெனச் சுற்ற றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், மதுரை, திரு வண்ணாமலை, செங்கல்பட்டு, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த வழி காட்டுதல் பின்பற்றப்படாமல் ‘அரசு தரிசு’ என்றே பதியப் பட்டு வருகிறது.

எனவே, முதலமைச்சர் இப்பிரச்சனையில் நேரடி யாகத் தலையிட்டு, மீட்கப்படும் நிலங்களை ‘ஆதிதிராவிடர் நிலம்’ எனப் பதிவு செய்யத் தெளிவான அரசாணை பிறப்பிப்பதோடு, அவற்றை மீண்டும் பட்டியலின மக்க ளுக்கே பகிர்ந்தளிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.