முந்தய பக்கம்

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து துவக்கம்

8 Oct 2026, 2:33 am
பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து துவக்கம்
<p><strong>பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து துவக்கம்</strong></p><p>உடுமலை, அக்.7-திருமூர்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் மூன்று மாதங்களுக்குப்பிறகு மீண்டும் தண்ணீர் வர தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.</p><p>திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை இல்லாததால், கடந்த சில மாதங்களாக பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்திருந்தது. இதனால் அருவியை காண வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக திருமூர்த்திமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்து, பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு அருவியில் தண்ணீர் வருவதால், திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரை கண்டு ரசித்தும், இயற்கை அழகை பார்த்தும் மகிழ்ச்சியடைந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram