தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

2 hours before
பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

உடுமலை, அக். 5– கடுமையான வறட்சி காரணமாக கடந்த 100 நாட்களுக்கு மேலாக நீர்வரத்து இன்றி காணப்பட்ட திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு மீண்டும் நீர் வர தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் பக்தர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. இதனால் அருவிக்கு வந்த பக்தர்கள் நீராட முடியாமலும், சுற்றுலா பயணிகள் அருவியின் இயற்கை அழகை ரசிக்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், ஞாயிறன்று இரவு குருமலை மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராமப் பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக பாலாற்றில் சீரான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பஞ்சலிங்க அரு

வியிலும் மீண்டும் தண்ணீர் கொட்ட தொடங்கியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பக்தர்கள் புனித நீராடவும், சுற்றுலாப்பயணிகள் அருவியை கண்டு களிக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ள செய்தி பரவியதை அடுத்து, திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.