முந்தய பக்கம்

பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி!

28 Oct 2026, 12:31 am
பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி!
<p><strong>பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி!</strong></p><p>உடுமலை, அக். 27-உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கனமழை காரணமாக குளிக்கவும், அருவிக்கு செல்லவும்சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டநிலையில், நீர்வரத்து இயல்பான நிலையில் செவ்வாயன்று அனுமதி வழக்கப்பட்டது.திருமூர்த்திமலை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும், பஞ்சலிங்க அருவிக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மலைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால், அருவியில் நீர்வரத்து பாதுகாப்பான அளவில் இருப்பதாகக்கருதி, செவ்வாயன்று சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram