கல்வியின் வெளிச்சம் பரப்பும் ‘பாஞ்சாலி’!
20 Jun 2026, 9:14 pm

கல்வியின் வெளிச்சம் பரப்பும் ‘பாஞ்சாலி’!

“ஒரு தாத்தா, ஒரு பேரன், ஒரு வினா.ஆட்டை மேய்ப்பதா, கல்வி கற்பதா? இந்த எளிய கேள்வியின் ஆழத்திலிருந்து பிறந்தது “பாஞ்சாலி” என்ற குறும்படம்”.

ஆடு மேய்க்கும் ஒரு தாத்தா, தன் வாழ்நாள் முழுவதும் ஆட்டை மேய்த்தே கழித்தவர், தன் பேர னையும் அதே வழியில் தன்னோடு அழைத்துச் செல்ல நினைக்கிறார். ஆனால், அந்த மண்ணின் குரல் வேறு ஒன்று சொல்கிறது.“கல்வி தான் மனிதனை மனிதனாக்கும்” என்று. அந்தக் குரலுக்காக அந்த தாத்தாவின் உள்ளுணர்வு போராட் டமே இந்தக் குறும்படத்தின் உயிர் நாடி. வறண்ட மண் என்று சொல்லப் படும் ராமநாதபுரம், படைப்பாளி களை வற்றாமல் சுரக்கும் தேன் ஊற்று. அந்த மாவட்டத்தின் திருப் புல்லாணி அருகே, தாதனேந்தல் என்ற சிறு கிராமத்தில் இந்தக் குறும்படம் உயிர் பெற்றது. மண் ணின் மணம், வெய்யிலின் வெப் பம், மக்களின் வாழ்க்கை எல்லா மே திரையில் இயல்பாக வழிந் தோடின.

மலர்ந்தது திரையில் மண்ணின் கதை

இந்தக் கதையின் விதை முளைத்தது ஒரு சிறுகதையிலி ருந்து. ராமநாதபுரம் மாவட்டம், மங்களக்குடியைச் சேர்ந்த நா. கலையரசன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி, கவிஞர், சிறுகதை எழுத்தாளர். அவர் “மூளைச்சாவு” என்ற சிறுக தையை எழுதியிருந்தார். மக்களோடு வாழ்ந்துவரும் எழுதிய கதை, மக்களுடைய வலியையும் விழிப்பையும் நேர்மையாகப் பேசியது. அந்தக் கதைக்கு திரைவடிவம் கொடுத் தவர் சேலத்தைச் சேர்ந்த இயக்கு நர் ஆர். சுப்பிரமணிய பாரதி. “நந்தி” திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில் ராமநாதபுரம் மண்ணோ டும் மனிதர்களோடும் பிணைந்த பாசம் அவரை இன்னும் அம்மண் ணை நோக்கி இழுத்துக் கொண்டி ருந்தது. “அங்கு ஏகப்பட்ட கதை சொல்லிகள் இருக்கிறார்கள்” என்று அவர் உணர்ந்தது பொய்யா கவில்லை. தமிழ்நாடு திரைப்பட இயக்கு நர்கள் சங்கம், இளம் இயக்குநர் களுக்கு வாய்ப்பளிக்கும் வண் ணம் பெங்களூரிலுள்ள இன்னோ வேட்டிவ் பிலிம் அகாடமியோடு இணைந்து ஒரு குறும்படப் போட்டி யை ஏற்பாடு செய்தது. அதில் 30 இயக்குநர்கள் தங்கள் கனவு களை குறும்படங்களாக வடித் தனர். சுப்பிரமணிய பாரதியும் கலை யரசனின் கதையை “பாஞ்சாலி” என்ற பெயரில் திரையில் கொண்டு வந்தார். இசையமைப்பாளர் அமர்கேத்தின் இசையும், ஒளிப் பதிவாளர் கோகுலின் காமிரா கண் ணும் அந்தக் கதைக்கு உணர்வு சேர்த்தன. நடிப்பிலும் அதே உண்மை, திரையரங்கில் பழகிய நடிகர்கள் மட்டுமல்ல, தாதனேந்தல் கிராமத் திலேயே வாழும் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தீபக், ஊர் துணைத் தலைவர் இளையராஜா போன்றவர்களும் திரையில் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தனர். உதவித் தலைமை யாசிரியர் ஜாகீர், நடிகர் ராஜேந் திரன், சின்னத்திரை நடிகை ஸ்ரீப்ரியா என பலரும் இணைந்து படத்தை உயிரோட்டமாக்கினார் கள்.

650 படங்களில் முதன்மை

வெறும் 29 நிமிடங்கள் நீடிக் கும் இந்தக் குறும்படம், பல மாநிலங்களிலிருந்தும், பல நாடுகளிலிருந்தும் வந்த 650-க்கும் மேற்பட்ட உலகளாவிய படங்க ளோடு போட்டியிட்டது. எடிட்டர் லெனின், நடிகர் நாசர், நடிகை அர்ச்சனா, எழுத்தாளர் சுபா, ஒளிப்பதிவாளர் ரத்னவேல் ஆகியோர் நடுவர்களாக இருந்த இந்தப் போட்டியில் “பாஞ்சாலி” கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்திலும் சிறந்து, சர்வோத்தமப் படமாகத் தேர்வுபெற்று முதலிடம் வென்றது. ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசும் கிட்டியது. 2022, அக்டோபர் 9ஆம் நாள், பெங்களூர் சர்வ தேசக் குறும்பட விழாவில் ஒன்றிய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் இயக்குநர் சுப்பிரமணிய பாரதியிடம் விருதை வழங்கி பாராட்டினார். ராமநாத புரம் மண்ணின் வெற்றி அரங் கேறிய நேரம் அது.

மாணவர்களுக்காக இலவச திரையிடல்

இப்போது அந்த வெற்றி மாண வர்களிடம் வருகிறது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையும் பொது நூலக இயக்ககமும் இணைந்து, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த இந்த வேளையில்,”பாஞ்சாலி” குறும் படத்தை நேரில் காண விரும்புபவர் களுக்கு, 13 ஜூன் 2026, சனிக்கிழ மை, மாலை 5 மணிக்கு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழ் நூல்கள் பிரிவு, 2-ஆம் தளத்தில் இலவசமாகத் திரையிடப்பட்டது. மாணவர்கள், பத்திரிகையா ளர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப் படத்துறையினர் என பலரும் கூடி அந்தச் சிறு கதையின் பெரிய உண் மையை ஒருமனதாக உணர்ந்தனர். இதில் இயக்குநர் ஆர்.சுப்பிரம ணிய பாரதியும் கலந்துகொண் டார். ஒரு தாத்தாவின் கண்ணீரில் ஒரு குழந்தையின் எதிர்காலம் விதைக்கப்படும். அந்த 29 நிமிடங் களை தவறவிடாதீர்கள்.