முந்தய பக்கம்

பஞ்சாலைத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

11 Dec 2025, 5:47 pm
பஞ்சாலைத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
<p><strong>பஞ்சாலைத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்</strong></p> <p>சேலம், டிச. 11- சேலம் மாவட்டம், ஓம லூர் அருகேயுள்ள ஆர்சி செட்டிபட்டியில் இயங்கி வரும் தனியார் நரசூஸ் ஸ்பின்னிங் மில்ஸ் ஆலை யில் பணிபுரியும் தொழிலா ளர்கள், 11 அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி வியா ழனன்று ஆலையின் வாயில் &nbsp;முன்பு கால வரையற்ற உண் ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இப்பஞ்சாலையில் சுமார் 35 ஆண்டு களாக 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நீண்ட காலமாக &nbsp;இத்தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்ப ளம், பஞ்சப்படி, வீட்டு வாடகை, கல்வி &nbsp;உதவித்தொகை மற்றும் பயணப்படி உள் ளிட்ட அத்தியாவசியக் கோரிக்கைகளை ஆலை நிர்வாகம் நிறைவேற்றாமல் உள் ளது. நிர்வாகத்தின் இந்த அலட்சியத்தைக் கண்டித்து, பல ஆண்டுகளாகத் தொழிலா ளர்கள் சேலம் மாவட்ட பஞ்சாலைத் தொழி லாளர் சங்கத்தில் இணைந்து பல்வேறு கட்டப் &nbsp;போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், ஆலை நிர்வாகம் இதுவரை &nbsp;இக்கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க வில்லை. இதையடுத்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று தொழிலாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். இதன்தொடர்ச்சியாக, 11 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, சிஐடியு சேலம் மாவட்ட பஞ் சாலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைமை யில் நரசூஸ் ஸ்பின்னிங் மில்ஸ் வாயில் முன்பு &nbsp;காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் &nbsp;தொடங்கினர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங் கினார். இதில், பஞ்சாலை சங்க மாவட்டத் &nbsp;தலைவர் பொன். பீட்டர், கிளைச் செயலாளர் &nbsp;இளங்கோ நந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏராளமான தொழிலாளர்களும் பங்கேற்றுள் ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram