முந்தய பக்கம்

பாம்புக்கோவில் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மேல் விற்பனை

3 Nov 2026, 10:15 pm
பாம்புக்கோவில் ஆட்டுச்சந்தையில்  ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மேல் விற்பனை
<p><strong>பாம்புக்கோவில் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மேல் விற்பனை</strong></p><p>தென்காசி, நவ.03- சங்கரன்கோவில் அருகே உள்ள பாம்புக்கோவில் சந்தை கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற புகழ்பெற்ற ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சந்தையில் குவிந்து ஆடுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.சந்தையில் ஆடுகள் அதன் தரம் மற்றும்எடைக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. ஒரே நாளில் சுமார் ரூ.4கோடிக்கும் மேல்ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை அதிகரித்ததால் கால்நடை வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram