பாமாயில், பாசி, துவரை, உளுந்தம் பருப்பு விலை சரிவு
12 Jul 2026, 11:52 pm
<p><strong>பாமாயில், பாசி, துவரை, உளுந்தம் பருப்பு விலை சரிவு</strong></p><p>விருதுநகர், ஜூலை 12- விருதுநகர் சந்தையில் பாமாயில், பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு, துவ ரம் பருப்பு ஆகியவற்றின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தையில் அத்தியா வசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரம் தோறும் வெளி யிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வரு மாறு: பாமாயில் 15 கிலோ கடந்த வாரம் ரூ.2,355 என விற்ற நிலையில், இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.15 குறைந் துள்ளது. எனவே, டின் ஒன்று ரூ.2,340 என விற்கப்படுகிறது. துவரம் பருப்பு 100 கிலோ நயம் வகை கடந்த வாரம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.11,200 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் வெளி மாநிலங்களிலிருந்து சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குவிண்டாலுக்கு ரூ.200 வரை குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10,800 முதல் ரூ.11 ஆயிரம் வரை விற்பனை யாகிறது. இதேபோல் துவரம் பருப்பு லயன் புதுசு வகை கடந்த வாரம் ரூ. 10,500 முதல் ரூ.10,700 வரை விற்பனையா னது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.200 குறைவு ஏற்பட்டு ரூ.10,300 முதல் ரூ. 10,500 வரை விற்பனை செய்யப்படு கிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகை கடந்த வாரம் ரூ.10,800 முதல் ரூ.11 ஆயிரம் வரை விற்ற நிலை யில் இந்த வாரம் வரத்து அதிகரித்த காரணத்தால், சந்தையில் மூட்டைக்கு ரூ.200 வரை விலை குறைவு ஏற்பட் டுள்ளது. இதனால் குவிண்டால் ஒன்று ரூ.10,600 முதல் ரூ.10,800 வரை விற்கப் படுகிறது. இதேபோல் உருட்டு உளுந்தம் பருப்பு பர்மா வகை கடந்த வாரம் ரூ.8,800 முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்ற நிலையில் இந்த வாரம் வரத்து அதிகரித்த காரணத்தால், சந்தையில் மூட்டைக்கு ரூ.200 வரை விலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குவிண்டால் ஒன்று ரூ.8,600 முதல் ரூ.8,800 வரை விற்கப்படுகிறது. தொலி உளுந்தம் பருப்பு குவிண்டால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10,200 வரை விற்ற நிலையில், இந்த வாரம் மூட்டைக்கு ரூ.200 குறைந்துள் ளது. எனவே, குவிண்டால் ரூ.9,800 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.9,050 முதல் ரூ.9,200 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.50 மட்டும் குறைந்துள்ளது. எனவே, குவிண்டால் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.9,150 வரை விற்பனையாகிறது. அதேவேளை, கடலை எண்ணெய், நல்லெண்ணெய், வத்தல், மல்லி, பட்டாணி பருப்பு, பாசிப் பயறு ஆகிய வற்றின் விலையில் மாறுதல் ஏற்பட வில்லை. கடந்த வாரம் விற்கப்பட்ட விலையே தொடர்கிறது.</p>
