பள்ளிபாளையத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம் பிறந்து 18 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு; பெற்றோர் கதறல்!
2 hours before

பள்ளிபாளையத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம் பிறந்து 18 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு; பெற்றோர் கதறல்!

பள்ளிபாளையம், செப். 21 -நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பிறந்து சில வாரங்களே ஆன இரு பச்சிளம் குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி அன்னலட்சுமி. இத்தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி ஈரோடு அரசுமருத்துவமனையில் அன்னலட்சுமிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என அழகான இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.பிரசவத்திற்குப் பின் சிகிச்சைகள் முடிந்து, கடந்த 16-ஆம் தேதி தாயும் குழந்தைகளும் நலமுடன் வீட்டிற்குத்திரும்பினர். இந்நிலையில், இன்று மதிய வேளையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்காக அன்னலட்சுமி குழந்தைகளைத் தூக்கியுள்ளார். அப்போது,இரண்டு குழந்தைகளும் கண் திறக்காமலும் மூச்சின்றியும் உயிரற்றுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அலறித் துடித்தனர்.

பதறியடித்த பெற்றோர், உடனடியாக இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைந்தனர். எனினும், குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.கண்களின் இமை மூடாமல், கையில் ஏந்திய பச்சிளம் மொட்டுகள் இரண்டும் ஒரே நேரத்தில் உயிரற்றுப்போனதைக் கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்போரின் நெஞ்சைப் பிசைவதாகஇருந்தது.

இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ஒரே நேரத்தில் இரு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.