முந்தய பக்கம்

சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எச்சரிக்கை

13 Jul 2026, 12:02 am
சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எச்சரிக்கை
<p><strong>சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எச்சரிக்கை</strong></p><p>நாமக்கல், ஜூலை 12- பள்ளிபாளையம் அரசு பெண்கள் பள்ளி அருகே மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலை யில், நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைத்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி யில் 21 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், நகரின் முக்கிய பகுதியாக உள்ள அரசு பெண்கள் பள்ளி அருகே, சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிலரை பிடித்து பள்ளிபாளையம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, பள்ளி பாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில், சம்பந்தப் பட்ட இடத்தில் எச்சரிக்கை பிளக்ஸ் பேனர் அமைக் கப்பட்டுள்ளது. அதில், அந்த பகுதியில் மது அருந்து தல், புகைப்பிடித்தல், வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிமீறு வோர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப் படைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram