நகராட்சி சாலைக்கு தடுப்பு: பொதுமக்கள் அவதி
6 May 2026, 12:55 am

நகராட்சி சாலைக்கு தடுப்பு: பொதுமக்கள் அவதி

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் சாலை தடை செய்யப்பட்டதால், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தின் எல்லைப் பகுதியாக பள்ளிபாளை யம் பகுதி அமைந்துள்ளது.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில் பள்ளிபாளையம் பகுதி உள்ளது.

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் எதிரே சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் புதிதாக மேம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு திமுக ஆட்சி காலத்தில் மேம்பாலம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மேம் பாலம் முறையான திட்டமிடுதலோடு கட்டப்படாததால் தினந் தோறும் மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

மேலும் ஈரோட்டில் இருந்து சங்ககிரி சாலைக்கு செல்லும் வகையில் மேம்பாலத்தின் கட்டமைப்பு அமைக் கப்பட்டுள்ளது.

இதனால் ஈரோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் வாகனங் கள் ஒருவழி பாதையாக மட்டுமே இந்த பாலத்தின் ஒரு பகுதியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பல்வேறு பகுதி மக்கள் மேம்பாலத்தின் மேலே ஒருவழிப் பாதையில் அடிக்கடி அதிகளவு பயணம் மேற்கொள்கின்ற னர்.

இதன் காரணமாக தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார்கள் தெரிவித்த நிலையில், கடந்த வாரத்தில் பள்ளிபாளையம் டிஎஸ்பி கௌதமன் அறிவுறுத்த லின் பேரில் பள்ளிபாளையம் போலீசார் ஒருவழிப்பாதை முழு வதும் இரும்பு டிவைடர்கள் அமைத்து முழுமையாக கயிறு களை கட்டி ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை அமைத்தனர்.

இந்நிலையில் நக ராட்சி சாலைக்கு எதிரே இரும்பு டிவைடர்கள் அமைக்கப் பட்டு கனமான கயிறுகள் கட்டப்பட்டுள்ளதால், நகராட்சிக்கு செல்லும் அதிகாரிகள் ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

மேலும் இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் தொலை தூரத்திற்கு சுற்றி வந்து நகராட்சிக்கு வர வேண்டிய நிலை உள்ளது.

எனவே நகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் வகை யில் தடை செய்யப்பட்டுள்ள தடுப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங் கள் செல்வதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வினை போலீசார் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.