தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளிக்கரணை சதுப்புநில கட்டுமானத் தடை: ஆகஸ்ட் 3-ல் இறுதி விசாரணை - உயர் நீதிமன்றம்

16 Jul 2026, 11:44 pm
பள்ளிக்கரணை சதுப்புநில கட்டுமானத் தடை:  ஆகஸ்ட் 3-ல் இறுதி விசாரணை - உயர் நீதிமன்றம்
<p><strong>பள்ளிக்கரணை சதுப்புநில கட்டுமானத் தடை: ஆகஸ்ட் 3-ல் இறுதி விசாரணை - உயர் நீதிமன்றம்</strong></p><p>சென்னை, ஜூலை 16– பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சுற்றி யுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்துள்ள கட்டு மானத் தடையை எதிர்த்த வழக்கு, ஆகஸ்ட் 3-ம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர் நீதி மன்றம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு முன், ‘கிரெடாய்’ சென்னை பிரிவின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் பி.எஸ். ராமன், 3,474 ஹெக்டேர் பரப் பளவில் கட்டுமானங்கள் முடக்கப்பட் டுள்ளதால் நில உரிமையாளர்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முறையிட் டார். சிஎம்டிஏ தரப்பில், இப்பகுதி யின் 84.2 சதவீத நிலப்பரப்பில் ஏற்கனவே அடர்த்தியான குடியிருப்புகள் உள்ளதாக வும், ‘ராம்சர்’ தளம் என அறிவிக்கப்படு வதற்கு முன்பே கட்டுமானங்கள் முடிந்து விட்டதாகவும் வாதிடப்பட்டது. மேலும், தற்போதைய தடையால் 47 விண்ணப்பங் கள் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி யது. தமிழ்நாடு மாநில சதுப்புநில ஆணையம், அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்குப் பிறகே ‘தாக்க மண்டலத்தை’ தீர்மானிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. சதுப்புநிலப் பாதுகாப்பை வரவேற்பதாகவும், ஆனால் முறையான ஆய்வின்றி விதிக்கப்பட்ட இந்த ஒரு கி.மீ. தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.