கிணற்றில் மரம் வளர்க்கும் பள்ளபாளையம் ஊராட்சி!
30 Oct 2026, 12:42 am

கிணற்றில் மரம் வளர்க்கும் பள்ளபாளையம் ஊராட்சி!

உடுமலை, அக்.29-கொங்கலக்குறிச்சி கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத பள்ளபாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊராட்சி செயலாளரை மாற்ற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சிக்

குட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமத்தில் சாக்கடை வசதி, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஊராட்சி செயலாளர் ராஜேஸ்வரியிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பொதுக்கிணறு பராமரிப்பின்றி மரம், செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கிணறு இருப்பது,ஊராட்சியில் நிலவும் பராமரிப்பு குறைபாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள்குறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், ஊராட்சி செயலாளர் ராஜேஸ்வரியை மாற்ற வேண்டும்.

கொங்கலக்குறிச்சி கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பொதுக்கிணற்றை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காணவும், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.