தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளபாளையம் ஊராட்சிக்கு குடிநீர் மறுப்பு! மாவட்ட நிர்வாகம் தலையிட சிபிஎம் வலியுறுத்தல்

4 Oct 2026, 2:00 am
பள்ளபாளையம் ஊராட்சிக்கு குடிநீர் மறுப்பு! மாவட்ட நிர்வாகம் தலையிட சிபிஎம் வலியுறுத்தல்

பள்ளபாளையம் ஊராட்சிக்கு குடிநீர் மறுப்பு! மாவட்ட நிர்வாகம் தலையிட சிபிஎம் வலியுறுத்தல்

உடுமலை, அக்.3-திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளபாளையம் ஊராட்சிக்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த உடுமலை நகராட்சிக்கு செல்லும் குடிநீர் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும்என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வழியில் இருக்கும் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்த பழைய குடிநீர் திட்டத்தின் மூலம், பள்ளபாளையம் ஊராட்சிக்கும் பல ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக ஊராட்சிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.குடிநீர் வழங்குவது தொடர்பாக பல்வேறு காரணங்களை நகராட்சி நிர்வாகம் கூறி வருவதாகவும், இதனால் பள்ள

பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்திற்குள்ளாகிவருகிறார்கள்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் கூறுகையில், சட்டப்படியாக நகராட்சிக்கு செல்லும் குடிநீர் கிடைக்காத நிலையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது இது குறித்து ஊராட்சி மன்ற அரிகாரிகளை கேட்டால்”பள்ளபாளையம் ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை பேசியுள்ளோம். குடிநீருக்கான கட்டணம் செலுத்தப்பட்டுவிட்டது என்றும், உரிய கடிதம்அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருந்தபோதும் குடிநீர் வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

பல மாதங்களாக நீடிக்கும் இப்பிரச்சினையால் பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பள்ளபாளையம் ஊராட்சிக்கும் அதன் கீழ் உள்ள கிராமங்களுக்கும் தடையின்றிக் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் வழங்குவதில் நிலவும் இழுத்தடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொதுமக்களின் அடிப்படைக் குடிநீர் தேவையை உறுதி செய்ய வேண்டும்,” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக் குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.