தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாலையம்பட்டியில் நிறுத்தப்பட்ட 100 நாள் வேலையை வழங்கக் கோரி விதொச மனு அளித்து போராட்டம்

26 May 2026, 10:14 pm
பாலையம்பட்டியில் நிறுத்தப்பட்ட 100 நாள் வேலையை வழங்கக் கோரி விதொச மனு அளித்து போராட்டம்
<p><strong>பாலையம்பட்டியில் நிறுத்தப்பட்ட 100 நாள் வேலையை வழங்கக் கோரி விதொச மனு அளித்து போராட்டம்</strong></p><p>அருப்புக்கோட்டை, ஏப்.26- 100 நாள் வேலைத் திட் டத்தை தொடர்ந்து செயல் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தி னர் மனு அளிக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அமல்படுத்தப் பட்டுள்ள கருவிழித்திரை ஸ்கேன் முறையை ரத்து செய்ய வேண்டும், திட் டத்தை அதன் இயல்பான பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், கூடுதல் நிதி ஒதுக்க வேண் டும் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டன. இதனை வலியுறுத்தி அருப்புக்கோட்டை ஒன்றி யம் பாலையம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு மனு வழங்கும் போராட்டம் நடை பெற்றது. இந்தப் போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பேபி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசி னார். மாவட்டக் குழு உறுப்பி னர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண் டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.