முந்தய பக்கம்

பாளையங்கோட்டையில் கருத்தரங்கம்

25 Sept 2026, 9:52 pm
பாளையங்கோட்டையில் கருத்தரங்கம்
<p><strong>பாளையங்கோட்டையில் கருத்தரங்கம்</strong></p><p>திருநெல்வேலி, செப்.25-நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ராஜேந்திர நகரில் உள்ள சரோஜ் நினைவகத்தில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (திருநெல்வேலி கோட்டம்) சார்பில் “இந்தியா எனும் சிந்தனை - அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் வியாழனன்றுகருத்தரங்கம் நடைபெற்றதுகருத்தரங்கிற்கு கோட்ட தலைவர் சி. முத்துகுமாரசுவாமி தலைமை தாங்கினார். கோட்ட பொதுச் செயலாளர் என். பொன்னையா வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் களப்பிரன் சிறப்புரையாற்றினார். கோட்ட பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார். கருத்தரங்கில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் எல்.சரவணப் பெருமாள், தமுஎகசமாவட்ட செயலாளர் எஸ்.வண்ணமுத்து, வங்கி ஊழியர் சங்க சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram