தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாலாற்றில் வறண்டு வரும் தடுப்பணை: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

15 Jul 2026, 1:44 am
பாலாற்றில் வறண்டு வரும் தடுப்பணை:  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

பாலாற்றில் வறண்டு வரும் தடுப்பணை: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

செங்கல்பட்டு, ஜூலை 14 – செங்கல்பட்டு மாவட்டம், பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள ஈசூர் - வல்லி புரம் தடுப்பணையில் தண்ணீர் இன்றி வறண்டு வருவதால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. பின்னணி பாலாற்றின் குறுக்கே 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயி களின் நீண்டகாலக் கோரிக் கையாக இருந்தது.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, வல்லிபுரம் பகுதியில் தடுப் பணை அமைக்க அரசு 2018-ஆம் ஆண்டு ரூ.30.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதனைத் தொடர்ந்து 2019- ஆம் ஆண்டு இத்தடுப் பணை கட்டி முடிக்கப்பட் டது. மழைக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரை இத்தடுப்பணையில் சேமிப்பதன் மூலம், ஆற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள சுமார் 80 கிராமங் களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்க ப்பட்டது. தற்போதைய நிலை தொடர்ந்து நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலைகளால், இத்த டுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் பெருமளவு வற்றி, ஆங் காங்கே குட்டைகள் போலக் காட்சி அளிக்கிறது.

இந்த நிலை நீடித்தால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைந்து கடும் குடிநீர் தட்டு ப்பாடு ஏற்படும் சூழல் உரு வாகியுள்ளது.

விவசாயிகள் கோரிக்கை தண்ணீர் தட்டுப் பாட்டைத் தவிர்க்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உறுதி செய்யவும், பாலாற்றின் குறுக்கே 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை என்ற அடிப் ்படையில் புதிய தடுப்பணை களைக் கட்ட அரசு முன் வர வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.