முந்தய பக்கம்

அமித் ஷாவிடம் ‘சரண்டர்’ ஆன பழனிசாமி! அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

11 Jan 2026, 2:59 pm
அமித் ஷாவிடம்  ‘சரண்டர்’ ஆன பழனிசாமி! அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
<p><strong>அமித் ஷாவிடம் &nbsp;&lsquo;சரண்டர்&rsquo; ஆன பழனிசாமி! அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்</strong></p> <p>அரியலூர், ஜன.11 - தனித்து ஆட்சி என்று அறிவித்த பழனிசாமி, இரண்டே நாளில் தில்லி சென்று அமித் ஷாவிடம் சரண்டர் ஆகி விட்டார் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விமர்சித்துள்ளார். அரியலூரில் ஞாயிறன்று அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், &ldquo;தற்போது தனியார் ஆம்னி பேருந்துகளை விட, &nbsp;அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்க பயணி கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசுப் பேருந்துகள் &nbsp;இல்லாத ஊர்களுக்கு வேண்டுமானால், ஆம்னி பேருந்து களில் கட்டண உயர்வு என்பது இருந்திருக்கலாம். ஆனால், &nbsp;அதுகுறித்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. புகார் &nbsp;வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக 20 டபுள் டக்கர் (மாடி) பேருந்துகள் வாங்கு வதற்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் டெண்டர் விட்டுள்ளது. அது முடிந்தவுடன் முதற்கட்டமாக சென்னை யில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். &nbsp;அதிமுகவை அமித் ஷாவிடம் அடிமைக் கட்சியாக பழனி சாமி அடமானம் வைத்துள்ளார். தனித்து ஆட்சி என்று அறி வித்த பழனிசாமி, இரண்டே நாளில் தில்லி சென்று அமித் ஷாவிடம் சரண்டர் ஆகி விட்டார். அதிமுகவை தேடி பாஜக வந்து கூட்டணி பேசிய நிலை மாறி, பாஜகவைத் தேடி அதிமுக &nbsp;சென்று பேச்சுவார்த்தை நடத்தும் நிலை உள்ளது&rdquo; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram