முந்தய பக்கம்

உடல் உறுப்பு தானம் செய்த இளைஞருக்கு அரசு மரியாதை

6 Jun 2026, 10:48 pm
உடல் உறுப்பு தானம் செய்த இளைஞருக்கு அரசு மரியாதை
<p><strong>உடல் உறுப்பு தானம் செய்த இளைஞருக்கு அரசு மரியாதை</strong></p><p>​​​​​​​பழனி, ஜூன் 6- திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திற்கு உட்பட்ட புஷ்பத்தூர் ஊராட்சியின் சாமிநாதபுரம் கிரா மத்தைச் சேர்ந்த ஜெகன் (21) உடல் உறுப்பு தானம் செய்ததையடுத்து, அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. சிவசுப்பிரமணியன் – செல்வி தம்பதியரின் மகனான ஜெகன், சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது பழனி புதிய பைபாஸ் சாலையில் (ஒட்டன்சத்திரம் – கோயம்புத்தூர் சாலை) நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. தொடர்ந்து வெள்ளியன்று பிற்பகல் 3 மணி யளவில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ஜெகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். அவர்களின் சம்மதத்தின் பேரில் உடல் உறுப்புகள் தான மாக வழங்கப்பட்டதால், பல நோயா ளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்த வர்களின் உயரிய தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழக அரசு வழங்கி வரும் மரியாதையின் அடிப்படையில், சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சடங்கில் பழனி வருவாய் கோட்டாட்சியர் இரா.கண்ணன் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் பழனி வட்டாட்சியர் மங்கலபாண்டியன், அரசு அலு வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஜெகனுக்கு இறுதி மரி யாதை செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram