தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

13 Jul 2026, 10:16 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆம்னி பேருந்துகள் பெரியகுளத்துக்குள் வராதா? நேரில் சென்று கண்டித்த தவெக எம்எல்ஏ

தேனி, ஜூலை 13-பெரியகுளத்துக்குள் வராமல் புறவழிச்சாலையிலே செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் குறித்து எம்எல்ஏ சபரிஐங்கரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பயணி களிடம் விசாரணை நடத்திய அவர், பின்னர் ஆம்னி பேருந்துகளின் செயல்பாடுகளை கண்டித்தார். பெரியகுளத்தில் இருந்து 5 கிமீ.தூரத்தில் திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலை உள்ளது. ஆம்னி பேருந்துகள் பெரியகுளத்துக்கு வராமல் இந்த சாலை யிலே கடந்து சென்று வருகின்றன. இதனால் பயணிகள் ஆட்டோ உள்ளிட்டவற்றில் சென்று அங்கு காத்திருக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் வடுகபட்டி பிரிவில் திடீர் ஆய்வு மேற் கொண்டு அங்கு நின்றிருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினார். இதில் பல ஆம்னி பேருந்துகள் பெரிய குளத்தை புறக்கணித்து புறவழிச்சாலையில் செல்வது உறுதியானது. இதனைத் தொடர்ந்து பயணிகளை ஏற்ற வந்த ஆம்னியை நிறுத்தி விசாரணை நடத்தினார். பின்பு அவர்களிடம் இதுபோன்று பெரியகுளத்துக்குள் வராமல் புறவழிச்சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டித்தார்.

தேனி வாலிபர் படுகொலை வழக்கில் தலைமறைவான கருப்பையா கைது

தேனி, ஜூலை 13- தேனியில் வாலிபரை கொலை செய்து துண்டு துண் டாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட வழக்கில் தலைமறைவான கருப்பையாவை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர் வேந்தர் பாலா என்ற பாலமுருகன் (50). ஜான்பாண்டியனின் தமமுக கட்சியின் நிர்வாகி. இவரது மனைவி ராஜலட்சுமி. இந்த தம்பதிக்கு ஸ்ரீகாந்த் என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். ராஜலட்சுமிக்கும் வேந்தர் பாலாக்கும் பிரச் சனை ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்து வரு கின்றனர். ஸ்ரீகாந்த் தனது தாயுடன் வசித்து வந்தார். இத னிடையே வேந்தர் பாலாவுக்கும் மகன் ஸ்ரீகாந்துக்கும் இடையே சொத்துப் பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்ரீகாந்த்தை காணவில்லை என ராஜலட்சுமி தேனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அவரை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் ராஜலட்சுமி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேந்தர்பாலா மகன்ஸ்ரீகாந்தை கொலை செய்து உடலை துண்டுகளாக வெட்டி முல்லை ஆற்றில் வீசிச் சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகன் அலெக்ஸ் பாண்டி இருவரையும் போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் அந்த வழக்கில் கருப்பையாவை தேடி வந்த நிலையில் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நாளை முதல் தேனி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்கை மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தேனி, ஜூலை 13- தேனி அல்லிநகரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் புதி தாக தொடங்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஜூலை 15 முதல் விண்ணப்படிவ விநியோகம் மற்றும் பதிவு தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார். கேந்திரிய வித்யாலயாவில் 2026–2027 ஆம் கல்வி யாண்டிற்கான ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை யிலான புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படி வங்கள் வழங்குதல் மற்றும் பதிவு 15.7.2026 முதல் 24.7.2026 வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேனி-அல்லிநகரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் பெற்றோர், மாண வரின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை கட்டாயமாக உடன் கொண்டு வர வேண்டும். மேலும், சேர்க்கைக் கான விரிவான கால அட்டவணை, தகுதித்தகமைகள், இட ஒதுக்கீட்டு விபரங்கள் மற்றும் தேவையான ஆவ ணங்கள் குறித்த முழுமையான தகவல்களை தேனி கேந்தி ரிய வித்யாலயா பள்ளி அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மக்கள் குறைதீர் கூட்டம்

தேனி, ஜூலை 13- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 525 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மரு.இரா.வைத்தி நாதன், 4 மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.11,445 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், ரூ.9 ஆயிரம் மதிப்பிலான கம்மோடு வீல் சேர், ரூ.594 மதிப்பிலான எல்போ ஊன்றுகோல், ரூ.15,750 மதிப்பிலான சக்கர நாற்காலி என மொத்தம் ரூ.36,789 மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) கவிதா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நிலம் முறைகேடு சார்பதிவாளர் பணியிடை நீக்கம்

பழனி, ஜூலை 13- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் முறை கேடாக தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகா ரத்தில் தொடர்புடையதாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பழனி மலையடிவாரத்தில் ஆண்டவர் பூங்கா சாலையில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான இந்த நிலம், 1888-ஆம் ஆண்டு தர்மசாசனத்தின் கீழ் வழங்கப்பட்டது. அந்த தர்மசாசனத்தின்படி, நிலத்தை விற்பனை செய்யவோ அல்லது தனி நபர்களின் பெயருக்கு மாற்றவோ சட்டப்படி அனுமதி இல்லை. தற்போது இந்த இடம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் இலவச வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆட்சேபணைகளை மீறி, தகுதியற்ற ஆவ ணங்களின் அடிப்படையில் இந்த நிலம் சுமார் ரூ.2 கோடிக்கு 2 தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடு கடந்த ஜூலை 6-ஆம் தேதி, கொடைக்கானல் பத்திரப்பதிவு அலுவலக சார்பதிவாளரான ஜஸ்டின் மணிகண்டன், பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக பணியாற்றியபோது நடை பெற்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில், பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் அதி காரிகள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசா ரணை நடத்தினர். அதில், பத்திரப்பதிவு விதி முறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சார்பதிவாளர் ஜஸ்டின் மணி கண்டன், முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய நான்கு பேர் மீது ஏமாற்றுதல், ஆவண மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சார்பதிவாளர் ஜஸ்டின் மணி கண்டனை பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. தற்காலி கமாக பணியிடை நீக்கம் செய்து உத்தர விட்டுள்ளார். முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்தி ரத்தை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குலத் தொழிலை திணிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி

அமைச்சர் வன்னியரசு குற்றச்சாட்டு சாத்தூர், ஜூலை 13- பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் குலத் தொழில் முறையை மீண்டும் திணிக்க முயற்சித்து வருகின்றன என்று தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு குற்றம்சாட்டினார். சாத்தூரில் நடைபெற்ற பள்ளி மாண வர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: “முன்னொரு காலத்தில் ஒவ்வொரு வரும் தங்களது குலத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. தற்போது அதே நிலையை மீண்டும் உரு வாக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள் ளிட்ட அமைப்புகள் முயற்சிக்கின்றன. பட்டியல் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூ கங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வருவதைத் தடுக்கவே இத்த கைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின் றன. பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தேர்வை கட்டாயமாக்கியுள்ளனர். ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை யை மாற்றி, அனைவருக்கும் மருத்துவக் கல்வி கிடைக்க வழிவகை செய்தவர் அண் ணல் அம்பேத்கர். தற்போது மீண்டும் பழைய நிலையை நோக்கி நாடு தள்ளப்படு கிறது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி’ என்ற பெயரில் நாட்டின் பன்முகத்தன்மை யை ஒன்றிய அரசு சீர்குலைக்க முயற்சிக்கி றது. அதேபோல் ‘வந்தே மாதரம்’ பாட லைக் கட்டாயப்படுத்துவதன் பின்னணி யிலும் அரசியல் உள்நோக்கம் உள்ளது. தமிழக சட்டப் பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்படு கிறது. அந்த நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மாணவர்கள் தியாகி இமானுவேல் சேகரன், பெருந்தலைவர் காமராஜர் உள் ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வர லாற்றை அறிந்து, சமூகத்தில் பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனையை வளர்க்க வேண்டும்” என்றார்.

ஏலக்காய் வியாபாரி வீட்டில் திருட்டு போடியில் 2 பேர் கைது

தேனி, ஜூலை 13- போடியில் ஞாயிற்றுக்கிழமை ஏலக் காய் வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து ரூ.52 ஆயிரம், பொருட்கள் திருடிய 2 பேரை கைது செய்தனர். போடி நகர் வ.உ.சி. நகர் முதல் தெரு வில் வசிப்பவர் சம்பத் மகன் பாலாஜி (40). இவர் ஏலக்காய் வியாபாரம் செய்து வரு கிறார். ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் விஷேசத்திற்கு செல்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இதே விஷேசத்திற்கு செல்வதற்காக அழைப்பதற்கு பாலாஜி யின் நண்பரும், எதிர் வீட்டில் வசிப்பவரு மான நவீன் இவரது மனைவி தீபிகா ஆகி யோர் பாலாஜியை கைப்பேசியில் அழைத் துள்ளனர். பாலாஜி விஷேசத்திற்கு சென்று கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். அப் போது நவீன் பாலாஜியின் வீட்டை பார்த்த போது வீடு திறக்கப்பட்டு உள்ள ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பாலாஜியிடம் தெரி வித்துள்ளார். திரும்பி வந்த பாலாஜி, நவீன், தீபிகா ஆகியோர் வீட்டுக்குள் சென்று சத்தம் போடவே உள்ளே இருந்த மர்ம நபர்கள் நவீ னையும், தீபிகாவையும் தள்ளிவிட்டு கத்தி யால் தாக்கிவிட்டு காரில் ஏறி தப்பிவிட்ட னர். இதுகுறித்து போடி நகர் காவல்நிலை யத்திற்கு தகவல் தெரிவித்து போலீசார் அங்கு வந்து பார்த்தனர். இதில் வீட்டின் கதவு, பீரோவை உடைத்து ரூ.52 ஆயிரம் ரொக்க பணம், வெள்ளி காசுகள், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரி யவந்தது. இதனையடுத்து கார் பதிவு எண்ணை வைத்து மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தினர். தேவதானப்பட்டி அருகே பிடி பட்ட காரில் இருந்த 2 நபர்களிடம் விசா ரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களி டம் போடி காவல்துறையினர் நடத்திய விசா ரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தும், அவர்கள் சிவகங்கை மாவட்டம், சிவ கங்கை ஆர்.சி.சர்ச் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் சதீஸ்குமார் (27), மானா மதுரை பெரியகோட்டையைச் சேர்ந்த செல்வம் மகன் முத்துப்பாண்டி என்பதும் தெரியவந்தது. இவர்கள் வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.