தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மோசடியாக பத்திரப் பதிவு குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்க! பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

17 Jul 2026, 9:12 pm
ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மோசடியாக பத்திரப் பதிவு குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்க!  பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
<p><strong>ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மோசடியாக பத்திரப் பதிவு குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்க! பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்</strong></p><p>திண்டுக்கல், ஜூலை 17 - பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் மோசடியாக பத்தி ரப்பதிவு செய்யப்பட்டது, மாநி லத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் நிலையில், இதில், தொடர்புடைய குற்றவாளி கள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமையன்று மாலை, பழனி மயில் ரவுண்டானா வில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு தலைமை வகித்து, கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மோசடி பத்திரப்பதிவு தொடர்பான பல் வேறு கேள்விகளை எழுப்பிய அவர், மோசடிக்கு காரணமான வர்களை தப்பவிடக் கூடாது என்றும், தயவு தாட்சண்யமின்றி கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், திண்டுக் கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் ஆர். சச்சிதானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், மாநி லக்குழு உறுப்பினர் ஜி. ராணி, பழனி நகர்மன்ற துணைத் தலைவர் கே.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கமலக்கண் ணன், பி. ஆஸாத், தா. அஜாய் கோஷ், பழனி நகர்மன்ற முன்னாள் தலைவர் வ. இராஜமாணிக்கம், பழனி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வ ரன், தொப்பம்பட்டி செயலாளர் கனகு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பகத்சிங், கெளரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.