பழனி கோவில் நில விவகாரம்: அமைச்சர் ரமேஷ் விளக்கம்
14 Jul 2026, 9:51 pm

பழனி கோவில் நில விவகாரம்: அமைச்சர் ரமேஷ் விளக்கம்

சென்னை, ஜூலை 14 - பழனி கோவில் நில விவகாரம் தொடர் பான கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

கரூர் இனாம் நில விவகாரத்தில் நயி னார் நாகேந்திரன் உள்ளிட்ட எதிர்க்கட்சி யினர் இனாம் நிலங்களை கோவில் நிலம் எனக் கூறி வருவதாகவும், இனாம் நிலத்துக்கும் கோவில் நிலத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் அவர்கள் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலமாக அந்த இடங்களுக்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், பட்டா பெற்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் அங்கு வாழ்ந்து வருவதாகவும் அவர் விளக்கினார்.

தனது உறவினர் ஒருவர் ரூ.100 கோடிக்கு நிலம் வாங்கியதாகப் பொய்ச் செய்தி பரப்பப்படுவதாகவும், அரசு மீது ஊழல் குற்றம் சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாகவும் அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டினார்.

நிலத்தை பதிவு செய்த சார் பதிவா ளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கரூரில் கோவில் நிலங்களை யாருக்கும் பட்டா போட்டுக் கொடுக்கவில்லை எனவும், கோவில் நிலங்களில் ஓர் இன்ச் நிலத்தைக்கூட யாருக்கும் கொடுக்க விருப்பமில்லை எனவும் அவர் தெரி வித்தார்.

பொய், புரட்டு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் எச்சரித்தார்.