பழனி கோவிலின் ரூ. 100 கோடி நிலம் : பத்திரப்பதிவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
15 Jul 2026, 9:52 pm

பழனி கோவிலின் ரூ. 100 கோடி நிலம் : பத்திரப்பதிவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை, ஜூலை 15 - பழனி தண்டாயுதபாணி கோவி லுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலம் தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் நிலம் தனியா ருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தற்கு எதிராக பழனி தண்டாயுத பாணி சுவாமி கோவில் செயல் அலு வலர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந் தார். அதில், இந்த நிலத்தைப் பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்தி கேயன், சக்திவேல் அமர்வில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கு தொடர்பான வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “நிலத்தை பதிவு செய்வ தற்கு முன்பு கோவில் நிர்வாகத்து க்கு நோட்டீஸ் அனுப்பி கருத்து கேட்டிருக்க வேண்டும். அதன் பிறகே பதிவுக்கு அனுமதி கோ ரியிருக்க வேண்டும். சொத்து தொடர் பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதா? என்பதை சார்- பதிவாளர் தரப்பில் தனி நீதிபதியிடம் தெரி வித்து இருக்க வேண்டும். இவற்றை மேற்கொள்ளாமல் உண்மையை மறைத்து தனி நீதிபதியிடம் உத்த ரவு பெற்றுள்ளனர். முறையான நபர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல், முழு விபரங்களை தெரிவிக்காமல் தனி நீதிபதி முன்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்த ரவு ரத்து செய்யப்படுகிறது. தனி நீதி பதியின் உத்தரவின் அடிப்படையில் பழநி சார் பதிவாளர் அலுவல கத்தில் நடைபெற்ற பத்திரப்பதிவு செல்லாது என அறிவிக்கப்படு கிறது” என்று தீர்ப்பளித்தனர். முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிபிஎம் நாளை ஆர்ப்பாட்டம்

பழனியில் தண்டாயுதபாணி கோவிலுக்குச் சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலம், மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) அன்று பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாநிலச்செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி. மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ராணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.