தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.20.15 கோடியில் பழனி ரயில் நிலைய புதுப்பிப்பு பணிகளை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. ஆய்வு

18 Jun 2026, 11:12 pm
ரூ.20.15 கோடியில் பழனி ரயில் நிலைய புதுப்பிப்பு பணிகளை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. ஆய்வு
<p><strong>ரூ.20.15 கோடியில் பழனி ரயில் நிலைய புதுப்பிப்பு பணிகளை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. ஆய்வு</strong></p><p>பழனி, ஜூன் 18- திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.20.15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் புதுப்பிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை திண்டுக் கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் நேரில் ஆய்வு செய் தார். பயணிகளுக்கான புதிய காத்தி ருப்போர் அறை, மேற்கூரை வசதி, சாய்வுதளம், நவீன கழிவறைகள், வாகன நிறுத்துமிடம், முகப்பு நுழைவாயில், நடைமேடை மேம் பாடு, மின்தூக்கி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதி கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வுக்குப் பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய ஆர்.சச்சிதா னந்தம், “பழனி ஒரு முக்கிய கோவில் நகரமாகும். ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர் கள் வருகை தருவதால், அவர் களின் தேவைகளை கருத்தில் கொண்டு ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட் டுள்ளது. குடிநீர் வசதிகள் முழுமை யாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. தற் போது 98 சதவீத பணிகள் நிறைவ டைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப் பட்டு அடுத்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்” என்றார். மேலும், சத்திரப்பட்டி மற்றும் அக்கரைப்பட்டி பகுதிகளில் மீண் டும் ரயில் நிறுத்தம் வழங்குவது தொடர்பாக ரயில்வே நிர்வாகத் திடம் வலியுறுத்தப்படும் என்றும், பழனியில் இருந்து திருச்சிக்கு புதிய ரயில் சேவையை இயக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக் கையை நாடாளுமன்றத்தில் முன் வைப்பதாகவும் தெரிவித்தார். ஈரோடு–பழனி ரயில் பாதை திட் டத்தை விரைவுபடுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டம் என்றும், அதற்கான நில எடுப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் துரி தப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தத் திட்டம் நிறைவேறினால் வட இந் தியா மற்றும் பிற மாநிலங்களிலி ருந்து பழனிக்கு வரும் பக்தர் களின் பயணம் மேலும் எளிதாகும் எனக் கூறினார். மேலும், மதுரை மற்றும் கோவை நோக்கி பகல் நேர ரயில் களின் எண்ணிக்கையை அதிக ரிக்கவும், டெல்டா மாவட்ட பக்தர் களின் வசதிக்காக புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பழனி நகர்மன்ற துணைத் தலைவர் கந்த சாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, கம லக்கண்ணன், ரயில் நிலைய வணிக ஆய்வாளர், நிலைய மேலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.