பழனியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து
12 Jul 2026, 11:55 pm
<p><strong>பழனியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து</strong></p><p>பழனி, ஜூலை 12- பொதுமக்களின் பாது காப்பை உறுதி செய்யும் நோக்கில் பழனி நகரின் முக்கிய பகுதிகளில் காவல் துறையினர் தீவிர நடை ரோந்து மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்கா ணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் இந்த ரோந்து நடைபெற்றது. இதில் காவல் ஆய்வா ளர்கள் தங்கமுனியசாமி, கார்த்திக், உதவி ஆய்வா ளர்கள் கிருஷ்ணன், சந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். ரோந்தின்போது சந்தேக நபர்கள் கண்காணிக்கப் பட்டதுடன், குற்றத் தடுப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பாது காப்பு குறித்து பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வும் ஏற் படுத்தப்பட்டது. இது போன்ற நடை ரோந்துப் பணிகள் தொடர்ந்து நடை பெறும் என காவல்துறை தெரிவித்துள்ளது.</p>
