தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழனி பட்டத்து விநாயகர் கோவில் திருமண மண்டபத்தில் அடிப்படை வசதி கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

7 Jul 2026, 10:43 pm
பழனி பட்டத்து விநாயகர் கோவில் திருமண மண்டபத்தில் அடிப்படை வசதி கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பழனி பட்டத்து விநாயகர் கோவில் திருமண மண்டபத்தில் அடிப்படை வசதி கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>பழனி, ஜூலை 7- திண்டுக்கல் மாவட்டம் பழனி தேவஸ்தான நிர்வா கத்தின் கீழ் செயல்படும் பட்டத்து விநாயகர் திருக் கோவில் திருமண மண்ட பத்தில் அடிப்படை வசதி களை உடனடியாக ஏற்படுத் தித் தர வேண்டும் என வலி யுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த திருமண மண்டபம் பல ஆண்டுகளாக செயல் பட்டு வந்த நிலையில், பரா மரிப்பு பணிக்காக மூடப்பட்டு சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடை பெற்றதாகவும், 3 ஆண்டு களுக்கு முன்பு மீண்டும் திறக் கப்பட்டதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர். இருப்பி னும், மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் தேவையான அடிப் படை வசதிகள் இல்லாத தால் இதுவரை பத்துக்கும் குறைவான திருமணங்களே நடைபெற்றுள்ளதாக அவர் கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, மண்டபத்தில் அமர்வதற்கான இருக்கை கள் மற்றும் சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள் இல்லாததால் பொதுமக் கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக தெரி வித்தனர். தமிழக அரசின் அரசா ணையின்படி, மணமக்களில் ஒருவர் அல்லது இருவரும் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள திருமண மண்ட பங்களில் இலவசமாக திரு மணம் நடத்த அனுமதி வழங் கப்பட்டுள்ளது. ஆனால், இருக்கைகள் மற்றும் சமை யல் பாத்திரங்களை தனி யாக வாடகைக்கு எடுக்க ரூ.15 ஆயிரத்திற்கும் மேல் செலவாகும் நிலையில், இது மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் வலியு றுத்தப்பட்டது. எனவே, பட்டத்து விநாய கர் திருக்கோவில் திருமண மண்டபத்தில் இருக்கைகள், சமையல் பாத்திரங்கள் உள் ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தர தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி க்கை விடுக்கப்பட்டது. பழனி நகரத் தலைவர் ஜெயக்குமார் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், நகரச் செயலாளர் தங்கவேல், பொருளாளர் அய்யனார், பழனி ஒன்றியத் தலைவர் மணிகண்டன், செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் மூகாம்பிகை ஈஸ்வரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் பகத் சிங் கண்டன உரையாற்றி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.