பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்
22 Sept 2026, 9:20 pm

பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்

பழனி, செப்.22-பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் நிறுத் தப்பட்டிருந்த ரோப் கார் சேவை, 64 நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது.பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரோப் கார் இயக்கம் தொடர்பான அனைத்து இயந்திரங்களும்என்.டி.டி. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன் முடிவுகளின் அடிப்படையில் புதிய ஷாப்ட் கொள்முதல் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. மேலும், கியர் பாக்ஸ் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த செப்.16 ஆம் தேதி முதல் புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டு மலைப்பகுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ரோப் காரின் கீழ்நிலை மற்றும் மேல் நிலையங்களில் இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் புதிய மேற்கூரை, ‘ஃபால் சீலிங்’ அமைத்தல், பக்தர்கள் பயன்படுத்தும் சுவர்களில் கிரானைட் பதித்தல்உள்ளிட்ட சிவில் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வல்லுநர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் ரோப் கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் தொடங்கப்பட்டது.