தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழனி முருகன் கோவில் நிலப் பத்திரப்பதிவு மோசடி முழுமையாக விசாரித்து பெரும் ஊழலைக் கண்டறிவீர்!

16 Jul 2026, 9:33 pm
பழனி முருகன் கோவில் நிலப் பத்திரப்பதிவு மோசடி  முழுமையாக விசாரித்து பெரும் ஊழலைக் கண்டறிவீர்!

பழனி முருகன் கோவில் நிலப் பத்திரப்பதிவு மோசடி முழுமையாக விசாரித்து பெரும் ஊழலைக் கண்டறிவீர்!

திண்டுக்கல், ஜூலை 16 - பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், அதிகார வர்க்கத்தின் துணையோடு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோசடியின் பின்னணியில் உள்ள மிகப்பெரிய அதிகாரப் புள்ளிகளைக் கண்டறிய, தமிழக அரசு ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனப் பழனி நகர மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்னணியும் மோசடியின் பரிமாணமும் பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க பல ஆண்டுகளாகச் சட்டப் போராட்டம் நடைபெற்று வந்தது. கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவுப்படி, இந்நிலம் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கோவிலின் இணை ஆணையரை இந்நிலத்தின் தக்காராக உச்சநீதிமன்றம் நியமித்தது. இவ்வளவு பாதுகாப்பான சட்டக் கட்டமைப்பைக் கொண்டிருந்த நிலத்தை, தண்டாயுதபாணி சுவாமியின் வாரிசு என்ற போலி அடையாளத்தைப் பயன்படுத்தி, முருகதாஸ் சுவாமி என்பவர் விற்றதாகக் கூறி, கடந்த ஜூலை 3 அன்று விழுப்புரம் முருகதாஸ், டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி மற்றும் பாப்பான்குளம் வெள்ளத்துரை ஆகிய மூவர் பெயரில் பத்திரம் பதியப்பட்டுள்ளது. 1

00 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்கு மட்டும் கணக்கு காட்டி, இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. அதிகாரிகளின் திட்டமிட்ட சதி இந்த மோசடியின் பின்னணியில் பத்திரப்பதிவுத் துறையின் உயர் அதிகாரிகளின் திட்டமிட்ட சதி அப்பட்ட மாகத் தெரிகிறது.

இப்பத்திரப்பதிவுக்கு முன்பாக, தனி நீதிமன்றத்தில் எதிர்மனு தாரராகக் கோவில் நிர்வாகத்தைச் சேர்க்காமலே, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து நீதிமன்றத்தையே ஏமாற்றி பத்திரம் பதிவதற்கான உத்தரவைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மார்ச் 27 அன்று இதே நிலத்தைப் பதிய முயற்சி மேற்கொண்ட போது, அப்போதைய சார்பதிவாளர் இதனைப் பதிய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

தற்போது தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளைக் கொண்டு இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது. பழனியில் இருந்த சார்பதிவாளர் விடுப்பில் சென்றதைத் தொடர்ந்து, திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பதிவாளர் 10 நாட்களாகப் பொறுப்பேற்கா மல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

அதேநேரம், கொடைக்கானலைச் சேர்ந்த இணை சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஜூலை 3ஆம் தேதி பத்திரம் பதிவதற்காகவே திட்டமிட்டுத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு, அடுத்த நாளே மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். மாவட்டப் பதிவாளர் சசிகலாவிற்கும் இந்தத் திரைமறைவு நடவடிக்கைகள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.

நீதிமன்றக் கண்டனமும் ரத்தும் ஜூலை 2 அன்றே, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து சார்பதிவாளருக்கு கடுமையான ஆட்சேபணைக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் ஜஸ்டின் மணிகண்டன் தன்னிச்சையாகப் பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த மோசடிப் பத்திரப்பதிவை எதிர்த்துக் கோவில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கார்த்தி கேயன், சக்திவேல் அமர்வு, இந்த மோசடிப் பதிவு செல்லாது என உத்தரவிட்டு அதனை ரத்து செய்தது.

“சார்பதி வாளரைத் தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளோம்” என்று அரசு தரப்பில் கூறியபோது, “பணியிடை நீக்கம் மட்டும் போதாது; இது போன்ற அதிகாரி கள் பணியில் தொடரக் கூடாது” என நீதிபதிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். அரசியல் தற்காப்பும் மெத்தனமும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆகிய இரண்டு துறைகளுக்கும் ஒரே செயலாளராக குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். உள்ள நிலையில், இந்த ஊழல் எப்படி நடந்தது என்ற கேள்வி எழுகிறது.

ஆட்சேபணை கடிதம் கொடுத்த இணை ஆணையர் மாரிமுத்து, மோசடி நடந்த சில நாட்களிலேயே (ஜூலை 9) பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலத்தின் மதிப்பு 100 கோடி என்பதால் இந்த ஆட்சேபணை கடித நகல் உயர் அதி காரிகளுக்கோ அல்லது காவல் துறைக்கோ கூட அனுப்பப்பட்டிருக்க லாம், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது இந்த விவகாரம் பூதாகரமான பிறகு, அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் லோகேஷ் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து, எதிர்க்கட்சிகள் வன்மத்துடன் பொய் பரப்புகிறார்கள் என்று தற்காப்பு வாதத்தை முன்வைக்கின்றனர்.

“வில்லங்கச் சான்று (EC) போட்டாலே இது கோவில் நிலம் என்று தெரியுமே, அப்புறம் எப்படிப் பதியப்பட்டது?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “சார்பதிவாளர் நீதிமன்ற உத்தரவை வைத்துத் தெரியாமல் பதிந்துவிட்டார், இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அமைச்சர்கள் மழுப்புகின்றனர். தற்போது சார்பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை சார்பதிவாளரை மட்டுமே கைது செய்துள்ளது; நிலத்தை வாங்கிய மற்ற மூவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? காவல்துறையும் இந்த நடவடிக்கையில் மெத்தனமாக உள்ளது. தமிழக அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைத்து விசாரித்தால் மட்டுமே, முருகனின் நிலத்தைப் பங்கு போடத் துடித்த இந்த அதிகாரக் கூட்டத்தின் முகம் வெளிச்சத்திற்கு வரும்.

கோவிலுக்குச் சொந்தமான இத்தகைய நிலங்கள் வேறு எங்கெல்லாம் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை முழுமையாகத் தணிக்கை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். - இலமு, திண்டுக்கல்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.