சண்முகபுரம் நகராட்சிப் பள்ளியில் மழலையர் வகுப்புகளுக்கு தடை பழனி நகர்மன்ற துணைத் தலைவர் கண்டனம்
6 Jun 2026, 9:36 pm
<p><strong>சண்முகபுரம் நகராட்சிப் பள்ளியில் மழலையர் வகுப்புகளுக்கு தடை பழனி நகர்மன்ற துணைத் தலைவர் கண்டனம்</strong></p><p>பழனி, ஜூன் 6 - பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மழலையர் வகுப்புகள் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) நடத்தக் கூடாது என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் குறிப் பாணை வழங்கியிருப்பது அதிர்ச்சியளிப்ப தாக பழனி நகர்மன்ற துணைத் தலைவர் கே. கந்தசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனி உழவர் சந்தை சாலையில் அமைந்துள்ள சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, முன்னாள் முதல மைச்சர் காமராஜர் தொடங்கி வைத்த வர லாற்றுச் சிறப்புமிக்க கல்வி நிலையமாகும். இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் நடைபெற்று வந்த மழலையர் வகுப்புகளை இனி நடத்தக் கூடாது என மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர் பள்ளி நிர்வாகத்திற்கு குறிப்பாணை வழங்கியிருப்பது பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நகர்மன்ற துணைத்தலைவர் கந்தசாமி, ஏழை மற்றும் எளிய மக்களின் குழந்தைகள் ஆரம்பக் கல்வியிலிருந்தே இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்பள்ளியில் மழ லையர் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளை பாதுகாக்கவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் பொறுப்பு வகிக்கும் கல்வித் துறை அதிகாரியே, மழலை யர் வகுப்புகளுக்கு தடை விதித்து குறிப்பாணை வழங்கியிருப்பது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக அவர் கூறினார். மேலும், இந்த உத்தரவால் பொருளா தார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் மாவட்ட மற்றும் மாநில அரசு அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கவனத்திற்கும் கொண்டு செல்லப் பட்டுள்ளதாக கூறிய அவர், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு சண்முக புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மழலை யர் வகுப்புகள் தொடர்ந்து தங்கு தடையின்றி நடைபெற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p>
