பழனியில் அதிகரிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனநல காப்பகத்தை முழுமையாக பயன்படுத்த கோரிக்கை
31 May 2026, 10:09 pm

பழனியில் அதிகரிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனநல காப்பகத்தை முழுமையாக பயன்படுத்த கோரிக்கை

பழனி, மே 31- பழனியில் சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால், அவர்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் பழனி நகரத் தலைவர் ஆர்.ஜெயக்குமார், நகரச் செயலா ளர் பி.தங்கவேல் ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழனி முருகன் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந் தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக் தர்கள் வருகை தருகின்றனர்.

அவர்களில் சிலர், தங்களது வீடுகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பழ னிக்கு அழைத்து வந்து, பின்னர் தெருக்க ளில் அனாதையாக விட்டுச் செல்லும் சம்ப வங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

இதன் காரணமாக, தெருக்களில் கை விடப்படும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதுடன், குறிப் பாக பெண்கள் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட ஆபத்துகளுக்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையை கருத்தில் கொண்டு, மன நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி களுக்கான காப்பகத்தை பழனியில் அமைக்க வேண்டும் என கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் சங்கம் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன் விளைவாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு பழனி தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் மனநல காப்பகம் தொடங்கப்பட்டது.

இந்த காப்பகத்தின் முதன்மை நோக் கம், பழனியில் தெருக்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி களை மீட்டு பாதுகாப்பாக தங்கவைத்து பராமரிப்பதாகும்.

ஆனால் தற்போது அந்த நோக்கத்திலிருந்து விலகி, வெளியூர்களி லிருந்து கொண்டு வரப்படும் மாற்றுத்திற னாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலையிலேயே செயல்பட்டு வருவதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதன் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்திருந்த தெருவோர மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகவும், ஆடை இன்றி சுற்றி த்திரிவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது போன்ற சம்பவங்களும் அதிகரித்துள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநல காப்பகத்தில் 100 பேரை தங்க வைத்து பராமரிக்கும் வசதி இருந்த போதி லும், தேவஸ்தான நிர்வாகம் 50 பேரை மட்டுமே நேரடியாக பராமரித்து வருவதாக வும், மீதமுள்ள 50 பேரை தனியார் தொண்டு நிறுவனமான செல்லமுத்து அறக்கட்டளை பராமரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

செல்லமுத்து அறக்கட்டளையின் பரா மரிப்பில் உள்ள பெரும்பாலானோர் வெளி யூர்களிலிருந்து அழைத்து வரப்பட்ட வர்கள் என்பதால், பழனியில் கைவிடப் படும் மாற்றுத்திறனாளிகளுக்கு போது மான இடவசதி கிடைக்கவில்லை என்று சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வா கமும் உடனடியாக தலையிட்டு, மனநல காப்பகத்தில் தங்கியிருக்கும் செல்லமுத்து அறக்கட்டளையின் பராமரிப்பில் உள்ள வர்களை பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

மேலும், காப்பகத்தின் முழு நிர்வாகத்தையும் மாற்றுத்திறனாளி கள் நலத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, மீதமுள்ள 50 இடங்க ளிலும் பழனியில் கைவிடப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளையே சேர்த்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.