பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பழனியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
17 May 2026, 8:59 pm

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பழனியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பழனி, மே 17- பெட்ரோல் மற்றும் டீசல் விலை யை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பழனியில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் 20 லட்சத் திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதி யாக பின்தங்கிய நிலையில், வேலை வாய்ப்பு இன்றி அரசின் உதவித் தொகையை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதாக அமைப்பினர் தெரிவித்த னர்.

மேலும், உடல் குறைபாடுகள் கார ணமாக பெரும்பாலான மாற்றுத்திற னாளிகள் மூன்று சக்கர மோட்டார் வாக னங்களைப் பயன்படுத்தியே அன்றாட தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறி னர்.

இந்த வாகனங்கள் குறைந்த மைலேஜ் தருவதால் ஏற்கனவே அதிக செலவினம் ஏற்பட்டு வரும் நிலை யில், பெட்ரோல் விலை உயர்வு அவர் களின் வாழ்க்கையை மேலும் சிரமர் படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்தும் மூன்று சக்கர மோட்டார் வாக னங்களுக்கு மானிய விலையில் பெட் ரோல் வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பழனி நகர தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

நகர செயலாளர் தங்க வேல், பொருளாளர் அய்யனார், பழனி ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்த னர். மாவட்டச் செயலாளர் பகத்சிங் கண்டன உரையாற்றினார்.