பழனி தொகுதி சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி கொடைக்கானலில் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு
11 Apr 2026, 5:30 am

பழனி தொகுதி சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி கொடைக்கானலில் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு

பழனி, ஏப். 10 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பழனி சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி கொடைக்கானல் பகுதிகளில், திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி வீடு, வீடாக வாக்கு சேகரித்தார்.

வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு கொடைக்கானல் இளவரசியான வில்பட்டியில் வாக்கு சேகரிப்பு பயணம் துவங்கியது. வேட்பாளர் என். பாண்டிக்கு, பறை இசை முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் வரவேற்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், ஆண்கள் பரிவட்டம் கட்டியும் தங்களின் பேராதரவைத் தெரிவித்தனர்.

வேட்பாளர் என். பாண்டியை, அருகில் இருந்த கோவில் மேடை மீது ஏற்றி சால்வை அணிவித்தனர். திமுக அரசின் மகளிர் நலத்திட்டங்கள் சமூக மேம்பாட்டு திட்டங்களை மேற்கோள்காட்டி பேசிய கூட்டணி கட்சித் தலைவர்கள் வேட்பாளர் என். பாண்டிக்கு வாக்கு சேகரித்தனர். மக்கள் மெல்ல-மெல்ல தேடிச் செல்ல வேண்டியதில்லை. என். பாண்டி வெற்றி பெற்றால், அவர் மக்களைத் தேடி வருவார் என்றும் கூறினர்.