பாலம்பாக்கம் கிராமத்தில் முறையான மின்விநியோகம் தொடங்கியது
22 Jul 2026, 11:45 pm
<p><strong>பாலம்பாக்கம் கிராமத்தில் முறையான மின்விநியோகம் தொடங்கியது</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 22- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா முக்குரும்பை ஊராட்சிக்கு உட்பட்ட பாலாம்பாக்கம் கிராமத்தில், முறையாக மின்சாரம் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து, பட்டு கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகிகளும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளும் இணைந்து, அப்பகுதியில் சீரான மின் விநியோகம் வழங்கக் கோரித் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களின் தீவிர முயற்சியின் பயனாக, பாலம்பாக்கம் கிராமத்தில் தற்போது புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு, தடையற்ற சீரான மின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்த சங்க நிர்வாகிகளுக்கு அப்பகுதி பொது மக்கள் தங்களது நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.</p>
