பாலக்காடில் சிபிஎம் அலுவலகம் மீது யுடிஎப் தாக்குதல் காவல்துறையினர் தாக்குதலில் 3 ஊழியர்கள் படுகாயம்
6 May 2026, 8:42 pm

பாலக்காடில் சிபிஎம் அலுவலகம் மீது யுடிஎப் தாக்குதல் காவல்துறையினர் தாக்குதலில் 3 ஊழியர்கள் படுகாயம்

பாலக்காடு கேரளத்தில் பாலக்காடு தொகுதியின் யுடிஎப் சட்டமன்ற உறுப்பின ரான ரமேஷ் பிஷாரோடியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது சிபிஎம் மாவட்டக்குழு அலு வலகம் தாக்கப்பட்டது.

அலுவல கத்துக்குள் புகுந்து காவல்துறை யினர் நடத்திய வெறியாட்டத்தில் 3 சிபிஎம் ஊழியர்கள் காயமடைந் துள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பிஷாரோடியை காவல்துறை அதி காரிகள் ஓட்டலில் சந்தித்த புகைப் படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து சிபிஎம் மாவட்டக் குழு அலுவல கத்தின் மீது யுடிஎப் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது அம்பலமாகி உள்ளது.

காவல்துறையினர் அலுவலகத்திற்குள் நுழைந்து ஊழியர்களைத் தாக்கியதும் இந்த சந்திப்பின் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது.

யுடிஎப் தொண்டர்கள் காவல் துறையினரின் முன்னிலையில் மாவட்டக் குழு அலுவலகத்தைத் தாக்கினர்.

போலீசாரின் தாக்குத லில் மூன்று எல்டிஎப் தொண்டர் கள் படுகாயம் அடைந்தனர்.