காயகல்ப் விருதில் தமிழக அளவில் முதலிடம்: பாலக்கோடு அரசு மருத்துவமனை சாதனை!
27 Sept 2026, 11:43 pm

காயகல்ப் விருதில் தமிழக அளவில் முதலிடம்: பாலக்கோடு அரசு மருத்துவமனை சாதனை!

தருமபுரி, செப்.27-காயகல்ப் விருதில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.17.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு, நாள்தோறும் சுமார் 800 முதல் 1,000 புறநோயாளிகளும், 80 முதல் 100 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய சுகாதார இயக்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவையின் தரம், நோயாளிகளுக்கான வசதிகள், தூய்மை, மருத்துவமனை பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் மதிப்பீடு நடத்தப்படுகிறது. அதன்படி, 2025–26 ஆம் ஆண்டுக்கான தமிழக அளவிலான மதிப்பீட்டில் பாலக்கோடு அரசுமருத்துவமனை காயகல்ப் விருதில் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக மருத்துவமனைக்கு ரூ.15 லட்சம்பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை, சுகாதாரம் மற்றும் பசுமைப் பராமரிப்புக்கான விருதையும் பெற்றுள்ளதால், அதற்காக ரூ.2.50 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மொத்தம்ரூ.17.50 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கிறது.

இந்த சாதனைக்கு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் ஒருங்கிணைந்த பணியே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையின் சிறப்பான செயல்பாட்டிற்காக தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்களை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பாரதி பாராட்டினார். தமிழக அளவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மருத்துவமனை ஊழியர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.