குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி
5 Apr 2026, 5:18 pm
<p><strong>குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி</strong></p>
<p>தருமபுரி, ஏப்.5- குடிநீர் உள்ளிட்ட அடிப் படை பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாலக்கோடு தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதியளித்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.என்.வி. எஸ்.செந்தில்குமார் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். காரிமங்கலம் ஒன்றியத் திற்குட்பட்ட கும்பாரஅள்ளி, மொட்டலூர், திண்டல் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் ஞாயிறன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, குடிநீர் பிரச்சனை, சாலை வசதி, சமுதாயக் கூடம் அமைப்பது போன்ற கோரிக் கைகளை கிராம மக்கள் முன்வைத்தனர். அதற்கு, நிச்சயம் தங்களுடைய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதாக வேட்பா ளர் வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்வில், தொகுதிப் பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்பிர மணி, தொகுதி பார்வையாளர் டி.அரியப்பன், மாநில விவசாய அணி துணைச்செயலாளர் சுப்பிரமணி, மாவட்டப் பொருளாளர் முரு கன், ஒன்றியச் செயலாளர் கண்ணபெரு மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
