தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை பாலக்கோடு வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி

7 Apr 2026, 5:42 pm
அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை  பாலக்கோடு வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி
<p><strong>அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை &nbsp;பாலக்கோடு வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி</strong></p> <p>தருமபுரி, ஏப்.7- கிராமங்களில் அடிப் படை வசதிகள் செய்து தர நட வடிக்கை எடுக்கப்படும் என பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதியளித்தார். மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில், தருமபுரி மாவட்டம் பாலக் கோடு சட்டமன்றத் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.என்.வி.எஸ்.செந்தில் குமார், அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு &nbsp;சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பாலக்கோடு &nbsp;ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்பழையூர், ஜோதி அள்ளி, பி.செட்டிஅள்ளி, மல்லாபுரம் உள் ளிட்ட ஊராட்சி பகுதிகளிலுள்ள கிராமங்க ளில் திங்களன்று வாக்குசேகரிப்பில் ஈடு பட்டார். அப்போது, அடிப்படை வசதியான குடிநீர், சாலை, மகளிர் சுய உதவிக் குழு &nbsp;கட்டிடம் அமைப்பது தொடர்பாக கோரிக் கையை பெண்கள் முன்வைத்தனர். இதை யேற்று அடிப்படை கோரிக்கைகளை நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என &nbsp;செந்தில்குமார் உறுதியளித்தார். இந்நிகழ் வில், தொகுதிப் பொறுப்பாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி, தொகுதிப் பார்வையாளர் டி. அரியப்பன், மாவட்டப் பொருளாளர் எம்.எம். எம்.முருகன், ஒன்றியச் செயலாளர் முனியப் பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.