பாலக்கோடு: விதொச காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு
28 Nov 2025, 2:28 pm
<p><strong>பாலக்கோடு: விதொச காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு</strong></p>
<p>தருமபுரி, நவ.28- பட்டா கேட்டு மனு அளித்த ஏழை மக்களுக்கு ஒரு மாதத்தித் குள் மனைப்பட்டா வழங்கப்படும் என, விதொச தலைமையில் நடை பெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து கோட்டாட்சியர் உறுதியளித்தார். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம், பல்வேறு ஊராட் சிக்குட்பட்ட கிராம மக்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தினை வகைமாற்றம் செய்து மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் தொடர் போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி, கடந்த மே 15, ஆக.18 ஆகிய தினங்களில் மனைபட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப் போது 15 தினத்திற்குள் மனைபட்டா வழங்குவதாக அதிகாரிகள் வாக் குறுதியளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காத வரு வாய்த்துறையை கண்டித்து வியா ழனன்று காலை அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் பொதுமக்கள் காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்று வந்தது. பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்று வந்த போராட்டத்தில் பெருந்திர ளானோர் கலந்து கொண்டனர். அப்போது போராட்ட பந்தலி லேயே உணவு சமைத்து, சாப்பிட்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து, நள்ளிரவு 12 மணிக்கு போராட்டம் நடந்த இடத் திற்கு வந்த தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி, வட்டாட் சியர் அசோக்குமார் உள்ளிட்ட வரு வாயத்துறை, காவல்துறை அதி காரிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாவட் டச் செயலாளர் எம்.முத்து, தலை வர் வீ.ரவி, வட்டச் செயலாளர் சி. ராஜா, வட்டத் தலைவர் ஜி.பாண்டி யம்மாள் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, வட்டாட்சியர் அலுவலகத்தில் இல வச மனைபட்டா கேட்டு கொடுக் கப்பட்ட 2221 மனுக்களை பரிசீ லனை செய்து, தகுதியின் அடிப்ப டையில் டிச.31 ஆம் தேதிக்குள் பட்டா வழங்கப்படும் என கோட் டாட்சியர் காயத்திரி உறுதியளித் தார். இதனையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.</p>
