விளையாட்டு
31 Mar 2026, 4:50 pm

பிரதமர் மருமகளை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷாவிற்கு ரூ.2 கோடி அபராதம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் முதல் போட்டி யின் போது, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் மருமகளுமான மரியம் நவாஸ் (பஞ்சாப் முதலமைச்சர்), லாகூரில் கடாபி மைதானத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். வளைகுடாப் போர் காரணமாக எரிபொருளைச் சேமிக்க லாகூர் மற்றும் கராச்சியில் ரசிகர்கள் போட்டிகளைக் காண தடை விதிக்கப்பட்டிருந்த சூழ லில், முதலமைச்சர் மரியம் நவாஸ் வருகை சர்ச்சையை ஏற்படுத்தி இருந் தது. இதனை குறிப்பிட்டு பாகிஸ் தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “நெருக்கடி காலத்திலும் கூட மரியம் நவாஸ் ஏன் லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் ராணியைப் போல நடத்தப் படுகிறார்?” என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவிற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 72,000 அமெரிக்க டாலர் (சுமார் 2 கோடி பாகிஸ்தான் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மத்திய ஒப்பந்தத்தின் விதிமுறைகளையும், சமூக வலைதள வழிகாட்டுதல்களையும் நசீம் ஷா மீறியுள்ளார். விசாரணைக்கு பிறகு, நசீம் ஷாவிற்கு 2 கோடி பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது சமூக வலை தள ஆலோசகர் பணிநீக்கம் செய்யப் பட்டு, கருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளார். நசீம் ஷா தனது நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் என்று கூட பாராமல் ஏஐஎப்எப் தலைவர் தன்னை துன்புறுத்துகிறார் செயற்குழு உறுப்பினரான வலங்கா அலேமாவ் குற்றச்சாட்டு

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (AIFF - ஏஐஎப்எப்) செயற்குழு உறுப்பினராக இருப்பவர் வலங்கா அலேமாவ் (பெண்). இவர் ஏஐஎப்எப் தலைவரான கல்யாண் சவுபே மற்றும் பிற அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகப் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சவுபே, துணைத் தலைவர் என்.ஏ.ஹாரிஸ் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சத்யநாராயண் ஆகியோர் தன்னை மரியாதையற்ற முறை யில் நடத்துகின்றனர். தன்னை மிரட்டும் நோக்கில் அனு மதிக்கப்பட்ட அளவைத் தாண்டி சத்தமாகப் பேசியுள்ள னர். ஒரு பெண் உறுப்பினரை அவமானப்படுத்தும் இந்த போக்கைத் தடுக்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். பாஜக மூத்த தலைவரான கல்யாண் சவுபே 2022ஆம் ஆண்டு முதல் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.