ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
22 Feb 2026, 3:26 pm
<p><strong>ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு</strong></p>
<p>காபூல், பிப். 22- கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த பதற்றங்களுக்கு இடையே ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் விமானப்படை திடீரென தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் தீவிரவாதக் குழுக்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இந்த வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் எல்லைக் கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகள் உருகுலைந்துள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஐத் தாண்டியுள்ளது. இதில் பொதுமக்கள் சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பதிலடி ஆப்கன் தலிபான் அரசு இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என்றும், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது.</p>
