முந்தய பக்கம்

பாகிஸ்தானில் வெப்ப அலையால் 10 பேர் உயிரிழப்பு!

6 May 2026, 12:20 pm
பாகிஸ்தானில் வெப்ப அலையால் 10 பேர் உயிரிழப்பு!
<p>பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் கடுமையான வெப்ப அலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு, கராச்சியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக 44.1&#176;C பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>நகரின் பல்வேறு பகுதிகளில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 5 பேர் வெப்பத்தாக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்துள்ளனர்.</p><p>தொடர்ச்சியான மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என சிந்து மாகாண அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது</p>
Share
FacebookXWhatsAppTelegram