தீக்கதிர் உலக செய்திகள்
9 Feb 2026, 3:02 pm

ஈரானில் மீண்டும் வெடித்த போராட்டம்: சீர்திருத்தவாதத் தலைவர் கைது

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில், ‘சீர்திருத்த முன்னணி’ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜாவத் எமாம் கைது செய்யப்பட்டுள்ளார். ஓமன் நாட்டில் அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்த அதே வேளையில், ஈரானியப் பாதுகாப்புப் படை இந்த திடீர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தப் போராட்டங்கள் வெளிநாட்டுச் சக்திகளால் தூண்டப்பட்டவை என்று ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

செஷெல்ஸ் நாட்டிற்கு $175 மில்லியன் நிதியுதவி: இந்தியா அறிவிப்பு

செஷெல்ஸ் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக 175 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரத் தொகுப்பை இந்திய அரசு அறிவித்துள்ளது. இதில் 125 மில்லியன் டாலர் கடன் உதவியாகவும், 50 மில்லியன் டாலர் மானியமாகவும் வழங்கப்பட உள்ளது. கடல்சார் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்புத் திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்: ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஈரானில் போராட்டக்காரர்கள் மீதான வன்முறையை நிறுத்தத் தவறினால் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்காவின் போர் மிரட்டலுக்கு ஈரான் ஒருபோதும் பணியாது என்று தெரிவித்துள்ளார். தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தனது நெருங்கிய நண்பர்களை இழந்துவிட்டது: ஃபசல் உர் ரஹ்மான்

தவறான வெளியுறவுக் கொள்கைகளால் பாகிஸ்தான் தனது உண்மையான நண்பர்களை இழந்துவிட்டதாக மௌலானா ஃபசல் உர் ரஹ்மான் கவலை தெரிவித்துள்ளார். ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு சீனாவின் நம்பிக்கையை மீட்டெடுக்கத் தவறிவிட்டதாகக் கூறிய அவர், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தில் (CPEC) தற்போது எந்த முன்னேற்றமும் இல்லை என்பதையும் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்: சானே தகைச்சி புதிய வரலாறு

ஜப்பானின் இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற 64 வயதான சானே தகைச்சி, அந்நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்கிறார். முன்னாள் தொலைக்காட்சித் தொகுப்பாளரான இவர், 1996 முதல் அரசியலில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார். ஜப்பானின் அரசியல் வரலாற்றில் ஒரு பெண் நாட்டின் உயரிய பதவியை அடைவது இதுவே முதல் முறையாகும்.

போர்ச்சுக்கலில் இடதுசாரிகள் அபாரம் ஜனாதிபதியாகிறார் செகுரோ

லிஸ்பன், பிப்.9- ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போர்ச்சுக்கல் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட அன்டோனியோ செகுரோ வெற்றி பெற்றிருக்கிறார். போர்ச்சுக்கல் புதிய ஜனாதிபதிக்கான முதல் சுற்றுத் தேர்தல் ஜனவரி 18 ஆம் தேதியன்று நடந்தது. 11 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் செகுரோ 31 விழுக்காடு வாக்குகளுடன் முதல் இடத்தையும், தீவிர வலதுசாரியான ஆண்ட்ரூ வென்சுரா 23.5 விழுக்காடு வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும் பெற்றனர். 50 விழுக்காடு வாக்குகளைப் பெறுபவர்தான் வெற்றி பெற முடியும். அப்படி யாரும் பெறாத நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்கள் இரண்டாவது சுற்றில் போட்டியிடுவார்கள். அந்த அடிப்படையில் செகுரோவும், வென்சுராவும் களத்தில் இருந்தனர். பிப்ரவரி 8 அன்று இரண்டாவது சுற்றிற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் சுற்றில் போட்டியிட்டவர்களில் பெரும்பாலான வாக்காளர்கள் செகுரோவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் அவர் வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, செகுரோவுக்கு 66.82 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. வென்சுராவுக்கு 33.18 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. பெரும் வெற்றி தீவிர வலதுசாரிகள் பல ஐரோப்பிய நாடுகளிலும் செல்வாக்குப் பெற்று வரும் நிலையில் போர்ச்சுக் கலில் இடதுசாரிகளின் வெற்றி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்போது பெற்றுள்ள வாக்குக ளின் அடிப்படையில், மொத்தமுள்ள 308 நகராட்சி களில் 303இல் செகுரோ முன்னிலை பெற்றுள் ளார். 20 மாவட்டங்களிலும் அவரே அதிக வாக்குக ளைப் பெற்றார். இவர் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். 2025 ஆம் ஆண்டில் நடந்த நாடாளு மன்றத் தேர்தலில் இக்கட்சி சரிவைச் சந்தித்து, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது.