முந்தய பக்கம்

சிக்கன நடவடிக்கை பாகிஸ்தானில் நீட்டிப்பு

12 May 2026, 10:32 pm
சிக்கன நடவடிக்கை பாகிஸ்தானில் நீட்டிப்பு
<p><strong>சிக்கன நடவடிக்கை பாகிஸ்தானில் நீட்டிப்பு </strong></p><p>பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நாடு தழுவிய சிக்கன நடவடிக்கைகளை ஜூன் 13 வரை நீட்டித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்படுவதில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்ட காரணமாக மார்ச் 9 அன்று (இரண்டு மாதங்களுக்கு) சிக்கன நடவடிக்கைகள் அறிவித்தது. தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram