முந்தய பக்கம்

சிறப்புப்பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

20 Nov 2025, 3:46 pm
சிறப்புப்பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

சிறப்புப்பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

ஈரோடு, நவ.20- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சிறப்புப்  பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி வியாழனன்று நடைபெற்றது. டிச.3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சிறப்புப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழனன்று நடைபெற்றது. இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி துவக்கி வைத்தார். இப்போட்டியில் செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, கொங்கு சிறப்புப்பள்ளி, அரிமா சிறப்புப்பள்ளி, கோகுலம் சிறப்புப்பள்ளி, உதயம் சிறப்புப்பள்ளி மற்றும் அன்பு சிறப்புப் பள்ளிகளில் பயின்று வரும் மொத்தம் 81 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு டிச.3 ஆம் தேதியன்று நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப் படவுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram